அறிவோம் தாவரங்களை – மூக்கிரட்டை செடி

மூக்கிரட்டை செடி (Boerhavia diffusa)

சாலையோரங்கள்,வயல்கள் ,காடுகள்,ஆற்றங்கரை, படுகைகளில் படர்ந்து கிடக்கும் பச்சிலை செடி நீ!

மூக்குறட்டை, சாட்டரணை, முச்சரை சாரணை,  சத்தி சாரணை, சாரனத்தி புட்பகம், ரத்த புட்பிகா, புனர்நவா எனப்   பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் ஒரு பொருள் குறித்த பல சொல் கிளவி நீ !

வாதம், வீக்கம், மலச்சிக்கல், சொரி, சிரங்கு,வாந்தி, செறியாமை,கண்பார்வை,கல்லீரல், மாலைக்கண் நோய், சிறுநீரக பிரச்சினை, புற்று நோய், உடல் எடை குறைப்பு ,சுவாச பாதிப்பு , கபம், சளி , ஆஸ்த்மா, கை, கால் வலி, நீர்ப் பெருக்கு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

லேகியமாய் பயன்படும் கரம்புச்செடியே!

இலை, காய், வேர், கொடி என எல்லாம் பயன்படும் நல்ல செடியே!

”சீதம் அகற்றும்; தினவு அடக்கும்….. பித்தமடக்கும் மூக்கிரட்டையாய்”எனக்  குணபாடம் போற்றும் குறுஞ்செடியே!

சித்த வைத்தியம்  & ஆயுர்வேதத்தில் பயன்படும் அற்புத  மூலிகையே!

மேற்புறம் பச்சை, கீழ்ப்புறம் சாம்பல் நிறமும் கொண்ட மேற்மை இலைச் செடியே!

அடஅடர் நீலம், வெண்மை நிறங்களில் பூப்பூக்கும் சிறு பூச்செடியே! தடிமனான வேர் கொண்ட தாவரமே !

கொடி இனத்தைச் சேர்ந்த இளஞ்செடியே!

நீண்ட ஆயுளைத் தரும் காய கல்பமே!

கால்நடைகளின் தீவனமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க !உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.