புதுடெல்லி:
புதுடெல்லியில் திட்டமிட்டதை விட குறைவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து நிகழ்வை இன்று பிரதமர் மோடி நாட்டில் தொடங்கியுள்ளது. புது டெல்லியில் 81 தடுப்பூசி மையங்களில் 8,100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல் நாளான இன்று, 4319 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் தடுப்பூசி நிர்வாகத்தைக் பார்வையிட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டு, தடுப்பூசி போட்டு கொண்டவர்களுடன் உரையாடினார்.

இருப்பினும், புதுடெல்லியில் திட்டமிட்டதை விட குறைவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.