அறிவோம் தாவரங்களை – விராலி செடி
விராலி செடி (Dodonaea viscosa).
வெப்பமண்டல பகுதிகளில் தானே வளரும் தேன்செடி நீ!
ஆப்பிரிக்கா ,அமெரிக்கா, ஆசியா ,ஆஸ்திரேலியா ,நாடுகளில் அதிகம் வளரும் அழகு செடி நீ!
கசப்புச் சுவை கொண்ட பட்டை செடி நீ !எலும்பு வலிமை ,வீக்கம், கட்டிகள் ,காய்ச்சல் ,சுவாச பாதிப்பு ,நீரிழிவு ,உடல் சூடு, சளி ,இருமல் ,ரத்தக் கசிவு, வயிற்றுப்போக்கு ,ஆறாத நெடுநாள் புண்கள் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
இலைகள் பட்டைகள் என எல்லாம் பயன்படும் நல்ல செடியே !
சித்த வைத்தியத்தில் பயன்படும் சிறந்த செடியே !
ரசவாதத்தில் மூலப்பொருளே!
வறட்சியைத் தாங்கி வளரும் புரட்சி செடியே !
சிறகு உள்ள விதை கொண்ட குறுஞ் செடியே!
விதை மூலம் இனப்பெருக்கம் செய்யும் மூலிகைச் செடியே!
காடுகளில் வளர்ந்து கிடக்கும் காயகல்பமே!
விராலிமலைக்குப் பெருமை சேர்க்கும் வினோத செடியே!
புதர்செடி போன்று வளர்ந்து இருக்கும் சிறு மரமே!
நீவிர் பல்லாண்டு வாழ்க !வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச. தியாகராஜன்
நெய்வேலி.
☎️9443405050.