இந்தி சினிமா உலகின் முதல் கனவுக்கன்னியான ஹேமமாலினி, பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யாக உள்ளார்.

மத்திய அரசின் வேளான் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்கள் போராட்டம் தேவையற்றது என்ற ரீதியில் ஹேமமாலினி கருத்து தெரிவித்துள்ளார்.

“வேளாண் சட்டத்தை தற்காலிகமாக உச்சநீதி மன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

பிறகும் எதற்காக போராட்டம் நடத்த வேண்டாம்?

விவசாயிகளுடன் பல முறை மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தங்களுக்கு என்ன தேவை என்பது விவசாயிகளுக்கு தெரியவில்லை. யாரோ சொல்கிறார்கள் என்பதால் அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்” என்றும் ஹேமமாலினி குற்றம் சட்டியுள்ளார்.

“பஞ்சாப் மாநிலம் இந்த போராட்டத்தால் பெரும் இழைப்பை சந்தித்துள்ளது. செல்போன் கோபுரங்களை எல்லாம் விவசாயிகள் சூறையாடியுள்ளனர், இது நல்லதல்ல” என்று ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி