டெல்லி: ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பிலான 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூடியது. கூட்டத்தில் 73 தேஜஸ் எல்.சி.ஏ போர் விமானங்கள், 10 பயிற்சி விமானங்களை வாங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து புதிய தேஜஸ் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன. தேஜஸ் எம்.கே 1 ஏ லைட் காம்பாட் விமானம் என்பது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் 4வது தலைமுறை போர் விமானம் ஆகும்.
இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி இருப்பதாவது: இந்த ஒப்பந்தம் இந்திய பாதுகாப்புத் துறை உற்பத்தியில் முக்கியத் திருப்பமாக இருக்கும். தற்போதைய எல்.சி.ஏ சுற்றுச்சூழல் அமைப்பை கணிசமாக விரிவுபடுத்துவதோடு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.