மைசூரு: கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில், லித்தியம்-அயன் வளத்தினைக் கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பும் விற்பனையும் அதிகமாக ஊக்குவிக்கப்படும் சூழலில், இந்த லித்தியம் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. பேட்டரி தயாரிப்புக்கு மிகவும் மூலாதாரமான வளமாக திகழ்கிறது இந்த லித்தியம்.
இந்திய அணு ஆற்றல் துறையின் ஒரு பிரிவான கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான அணு சார்ந்த தாதுக்கள் இயக்குநரகம் என்ற அமைப்பினால் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
மாண்டியா மாவட்டத்தின் மார்லகல்லா-அல்லபட்னா பகுதியில் அமைந்துள்ள வெப்பப் பாறைகளில் இந்த லித்தியம்-அயன் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 1600 டன்கள் அளவிற்கு லித்தியம்-அயன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.