
பிரபல மாடலாக இருந்து மலையாளத்தில் Ponnambili என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் ராகுல் ரவி.
தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தியுள்ளார் ராகுல். சன் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று நந்தினி. ராகுல் ரவி இந்த தொடரின் ஹீரோவாக நடித்திருந்தார்.
இவர் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி பிரபல மாடலும்,நடிகையுமான லக்ஷ்மி எஸ் நாயரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு பல பிரபலங்களும்,ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இவரது திருமணம் குறித்த சிறிய வீடீயோவை அவரது மனைவி லட்சுமி எஸ் நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
https://www.instagram.com/p/CJyTUVOB0xH/
Patrikai.com official YouTube Channel