மாஸ்கோ: ரஷியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது.

அந்நாட்டில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் சில மாதங்களாக மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 24,246 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒட்டு மொத்த பாதிப்பு 32,84,384 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 518 பேர் உயிரிழக்க பலி எண்ணிக்கை 59,506 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 26,62,668 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் நாடுகளுக்கு அடுத்தபடியாக ரஷியா 4ம் இடத்தில் உள்ளது.
Patrikai.com official YouTube Channel