தெஹ்ரான்:
ஈரானில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டு 17 வயதில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரானில் முகமது ஹசன் ரெசாய் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டில் கொலை குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 17 வயதில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த 12 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் 30 வயதான முகமது நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டார். ஈரான் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு மட்டும் சிறார் வயதில் கைது செய்யப்பட்ட 4 பேர் இதுவரை ஈரான் அரசால் தூக்கிலிடப்பட்டுள்ளனர். மேலும் 80 பேர் வரை ஈரானிய சிறைகளில் மரண தண்டனைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அவை தெரிவித்துள்ளது.