ருர்கேலா: இந்தியாவின் முன்னாள் ஹாக்கி நட்சத்திரமும், உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தவருமான மைக்கேல் கோண்டோ, உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
தற்போது 73 வயதாகும் கோண்டோ, ஒடிசாவின் ரூர்கேலாவிலுள்ள இஸ்பாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கேயே அவரின் உயிர் பிரிந்தது.
கடந்த 1972ம் ஆண்டில், ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த இவர், 1975ம் ஆண்டு ஹாக்கி உலகக் கோப்பை வென்ற அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
இவருக்கு கடந்த 1972ம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. 1975ம் ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி இறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. 1972 மற்றும் 1975 போட்டிகளில், இவர் மொத்தம் 3 கோல்களை அடித்தார்.