திருவண்ணாமலை:

க்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லவதற்கு வர வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கேட்டுக்கொண்டு உள்ளார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பேரிடர் மேலாண்மை தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதி நள்ளிரவு வரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையில் வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை சுமார் 8.30 மணி முதல் மறுநாள் 30-ந் தேதி (புதன்கிழமை) காலை 8.38 மணி வரை பவுர்ணமி உள்ளது.

 

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும் பவுர்ணமி நாளான வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லவதற்கு வர வேண்டாம் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கேட்டுக்கொண்டு உள்ளார்.