சமீப காலங்களில் ஊடக விவாதம் மற்றும் நேர் காணல்களில் தனி நபர் தாக்குதல் அதிகமாகி வருவது. சில நேரங்களில் நெறியாளர்/ தொகுப்பாளர்களும், பல நேரங்களில் உடன் பங்கு பெரும் நபர்களும் வார்த்தைகளால், குற்றசாட்டுகளால் அவதூறுகளால் சில சமயம் ஒருமையில் கூட தாக்கப்படுகிறார்கள். இது சரியான போக்கு அல்ல. குற்றசாட்டை அவதூறை நிகழ்ச்சியிலேயே திரும்பப் பெற சொல்வது என்ற முயற்சி இருந்தாலும், தீர்வாக இவ்வாறு சபை நாகரீகம் அறியாமல் பேசுபவர்களை எந்த காணொளியும் விவாதங்களுக்கோ நேர்காணலுக்கோ அழைப்பதில்லை என முடிவு எடுத்து புறக்கணிக்க வேண்டும். வட இந்திய ஆங்கில சேனல்களில் அர்னாப் கோஸ்வாமியின் நிகழ்ச்சிகளில் தனி நபர் விமர்சனந்த்தை அவர் வைக்கிறார் என்பதாலும், பங்கேற்பவர்களும் அதனையே செய்கிறார்கள் என்பதாலும் அதனை முன்னுதாரணமாகக் கொண்டு இங்கு செயல்பட வேண்டாமே…
பொதுவாக இவ்வாறு நாகரீகமற்றூ பேசுவதில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்களும், அனுதாபிகளாகக் காட்டிக் கொள்பவர்களும் அதிகம். அதற்காக மற்ற பிரிவினர், குறிப்பாக இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இளைத்தவர்களல்ல…எண்ணிக்கையில் குறைவு அவ்வளவேஎ… சபை நாகரீகம் கருதி அமைதியாக பேசுபவர்களை மடக்கி மடக்கி பேச விடாமல் செய்வது தான் அர்னாபின் பாணி… அதனை இங்கு தொடர வேண்டாமே… முன் மாதிரிகள் தேவையெனில் Dr. ராய், ராஜ்தீப், கரண் போன்றவர்கள் உள்ளனர். மேலும் நெறியாளர்/ தொகுப்பாளரின் புத்தி கூர்மையையும் புலன் விசாரணை செய்யும் வாதத்திறமையயும் வெளிக்காட்டுவது நிகழ்ச்சிகளின் நோக்கமாக இருக்காது என்றே கருதுகின்றேன். இது குறீத்து ஊடக உரிமையாளர்களும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. டி ஆர் பி களுக்கு அப்பால் சமூகக் கடமையும் நாகரீக கட்டமைப்பில் பங்க்கெற்க வேண்டிய தார்மீக பொருப்பும் உள்ளது என்பதை உணர்ந்து செயல் பட வேண்டும். இது தேர்தல் நேரம் அனைவரும் தங்கள் முகங்களை தொலைக்காட்சியில் காட்ட விரும்பும் நேரம். இதுவே சரியான தருணம்….
நன்றி : Chandra Barathi