டெல்லி: பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பிரிட்டனில் அதி தீவிரமாக உருவெத்துள்ள புதிய வகை கொரோனா வைரசால் உலகின் பல நாடுகள் பீதி அடைந்துள்ளன. இதையடுத்து, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரிட்டனில் இருந்து மற்ற நாடுகளுக்கான விமான போக்குவரத்தும் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் லண்டனுக்கு விமான சேவை இரு மார்க்கமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில், பிரிட்டனிலிருந்து வந்த பயணிகளை கண்காணிக்கும் வகையில் புதிக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 8ந்தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த அனைத்து பயணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் உதவியுடன் கண்டறிந்து, அவர்களை உடநிலை 14 நாட்கள் கண்காணிக்கப்பட வேண்டும.
அனைத்து பயணிகளின் சளி மாதிரிகளை புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட வேண்டும்.