சென்னை: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்க தமிழக அரசு ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: தமிழகம் முழுவதும் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்குவதற்காக ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஓய்வுபெற்ற ஊழியர்கள் இந்த பணப்பலன்களை பெற முடியும். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் 8 போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் பயனடைய முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.