சென்னை: ஜனவரி 9ந்தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜன.9ந்தேதி சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டம் தொடர்பாக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்படும். உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Patrikai.com official YouTube Channel