car side mirrors
சென்னை:
கார் டிரைவர்கள் பின்னால் வரும் வாகனங்களை கண்காணிக்கவும், கார் நிறுத்தங்களில் கார்களை நிறுத்தும் போது அவர்களுக்கு உதவியாக இருப்பது இரு சைடு கண்ணாடிகளும் தான். ஆனால், இந்த சைடு கண்ணாடிகளை பாராமரிப்பதும், அதோடு மள்ளுகட்டுவதும் தான் பெரிய பாடு. வெளியில் இருக்கும் நபர்கள் முகம் பார்ப்பதற்காக திருப்பிக் கொள்வார்கள்.
அதோடு நெருக்கடியான சாலைகளில் செல்லும் போது மற்ற வாகனங்களோடு முதலில் உரசுவதும் இந்த சைடு கண்ணாடியாகத் தான் இருக்கும். கார்களில் பல வசதிகளை புகுத்த பொறியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், இந்த சைடு கண்ணாடிக்கு மட்டும் விடிவு காலம் இல்லாமல் இருந்து வந்தது.
தற்போது இந்த தொல்லைகளில் இருந்து விடுபடும் வகையில் கட்டை விரல் அளவு கொண்ட டிஜிட்டல் வீடியோ கேமராவை கார்களின் இரண்டு புறமும் பொறுத்தும் தொழில்நுட்பம் வந்து விட்டது. கண்ணாடியை பார்க்க டிரைவர் எந்த பக்கம் திரும்புவாரோ அந்த இடத்தில் ஸ்க்ரீன் பொறுத்தப்படுகிறது.
இதன் மூலம் சைடு கண்ணாடிகளில் என்னென்ன பயன் கிடைத்ததோ, அவை அனைத்தும் இந்த ஸ்க்ரீனில் டிரைவருக்கு கிடைத்துவிடும். சூரிய வெளிச்சம், இரவு பயணத்துக்கு ஏற்ப கேமரா தானாக மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுமாம். ஆரம்பத்தில் இந்த புதிய முறைக்கு மாறுவது டிரைவர்களுக்கு சற்று கடினமாக தான் இருக்குமாம். காலப்போக்கில் இதற்கு முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் பழக்கமாகிவிடும் என்று கார் பொறியாளர்கள் கூறுகின்றனர்.