காசாகுவா

முகக் கவசம் அணியாமல் செல்ஃபி எடுத்த அதிபருக்கு சிலி நாட்டில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் உலகையே அச்சுறுத்தி வருகிறது.   இதற்கான சிகிச்சை முறைகள் இன்னும் கண்டறியப்படவில்லை.  கொரோனா தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு 4 நாடுகளில் போடப்பட்டு வருகின்றன.  உலகெங்கும் தற்போது சுமார் 7.71 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிலி நாட்டில் இதுவரை 5.85 லடம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இங்கு முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  முகக் கவசம் அணியாதோருக்கு சிலி நாட்டில் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.,   இந்நாட்டின் அதிபருக்கும் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது உலக அளவில் பரபரப்பாகி உள்ளது.

சிலி அதிபரான செபாஸ்ட்டியன் பினெரா தனது சொந்த ஊரான காசாகுவா நகருக்குச் சென்ற போது அங்குள்ள கடற்கரையில் ஒரு பெண் செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்பி உள்ளார்.  அதிபரும் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார்.  அதிபர் அப்போது முகக் கவசம் அணியாததால் இந்திய மதிப்பில் ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.