சென்னை: நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் ஊரிலுள்ள ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது என்று விமர்சித்து இருந்தார்.
அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலரும் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்தனர். முதலமைச்சர் பேட்டி குறித்து கருத்து கூறிய கமல்ஹாசன், முதலமைச்சரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.
இந்நிலையில் நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார் என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.