சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணணின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றிய கர்ணன், நீதிபதிகளையும், நீதித்துறை ஊழியர்களையும் அவதூறாக பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கர்ணனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்ப, சென்னை ஆவடியில் டிசம்பர் 2ம் தேதி, போலீஸாரால் கர்ணன் கைது செய்யப்பட்டு சைதை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் ஜாமீன் கோரி முன்னாள் நீதிபதி கர்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.