திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயில்கள் மீண்டும் செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்யவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவும் கோயில் நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தியது.
ஆனால் கோயில் கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 9 மாதங்கள் கழித்து, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் மொட்டை அடிக்கவும், காது குத்தவும் விதிக்கப்பட்டு உள்ள தடை தொடரும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.