பெங்களூரு: புத்தாண்டு கொண்டாட்டம், கேளிக்கை விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது.
கர்நாடகாவில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூருவில் புத்தாண்டுக்கு முன்பாக வரும் 31ம் தேதி இரவு 11 மணிக்கு வழக்கம் போல மதுபான விடுதிகளை மூடிவிடும்படி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இந் நிலையில் புத்தாண்டுக்கு கொண்டாட்டத்துக்காக ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், ரெஸ்டாரண்டுகளில் அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது என்றும் அங்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் அனுமதி இல்லை என்றும் கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒன்று சேர்ந்து நடனமாடுவது, விருந்துகள் கொடுப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை அமலில் இருக்கும். அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.