மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள், அருண் விஜய் 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். கொரோனா காரணமாக இந்த படங்களின் ஷூட்டிங் பாதித்தது.
சில தினங்களுக்கு முன் அருண் விஜய் அறிவழகன் படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார் அருண் விஜய்.இதுபோக அக்னி சிறகுகள் படத்தின் ஷூட்டிங்கையும் நிறைவு செய்திருந்தார் அருண் விஜய்.
இவர் இயக்குனர் ஹரியுடன் இணையவுள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.
தற்போது இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Drumsticks Productions இந்த படத்தை தயாரிக்கின்றனர். அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட உருவாகவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் 2021 பிப்ரவரியில் தொடங்கவுள்ளது என்றும் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Proud announce our next big project with Director #Hari & @arunvijayno1 produced by our @DrumsticksProd … This will be a mammoth project in #ArunVijay ‘s career. Shoot begins Feb 2021 and planning to release in cinemas Aug 2021.
@drumsticspro @arunganesan0014 @johnsoncinepro pic.twitter.com/9Reg05Rt2a— Drumsticks Productions (@DrumsticksProd) December 14, 2020