மும்பை: ஆர்டிஜிஎஸ் முறை நாளை நள்ளிரவு 12:30 மணி முதல் துவங்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஆர்டிஜிஎஸ் என்பது, மிக பெரிய தொகையை ஒரு வங்கியில் இருந்து, அதே வங்கியின் மற்றொரு கிளைக்கும், மற்ற வங்கிகளுக்கும் அனுப்ப பயன்படுத்தப்படும் முறையாகும். 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் அனுப்ப இந்த முறை உபயோகப்படும்.
தற்போது ஆர்டிஜிஎஸ் முறையானது வங்கி வேலைநாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் இந்த சேவை இருக்காது.
இந் நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், தமது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: ஆர்டிஜிஎஸ் முறை நாளை இரவு 12:30 மணி முதல் 24 மணிநேரமும் செயல்படும். சாத்தியாக்கிய ரிசர்வ் வங்கி, ஐஎப்டிஏஎஸ் மற்றும் உடன் பணியாற்றியவர்களுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்து உள்ளார்.