மும்பை: 
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் முன் வந்துள்ளார் என்று மகாராஷ்டிர அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவாப் மாலிக்  தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சரத்பவார் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்திருந்தார், அனைவரும் ஒன்றிணைந்த பின்னர் யார் இந்த அணிக்கு தலைமை தாங்குவது என்பது முக்கியமல்ல, அதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம், ஆனால் இப்போது எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சரத்பவார் இன்று தன்னுடைய 80-வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார், இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பதிவிற்கு பதிலளித்த மகாராஷ்டிர அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளதாவது: சரத்பவார் அனைத்து கட்சிகளுடனும் நல்ல ஒரு உறவை கொண்ட மூத்த தலைவர் என்றும், மூத்த தலைவர்கள் அனைவரும் அவரை வாழ்த்துவது இயல்பானது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சரத்பவாரின் 80-வது பிறந்த நாளை நாங்கள் கொண்டாடுகிறோம், அவர் சுமார் 60 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார், மத்திய அமைச்சராக மட்டுமல்லாமல் மகாராஷ்டிராவின் முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார், ஆகையால் தான் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்று நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.