அறிவோம் தாவரங்களை – வெண்டைச்செடி
வெண்டைச்செடி (Abelmoschus esculentus)
எத்தியோப்பியா உன்தாயகம்!
நீ ஊறிய நீர் ஓர் உன்னத மருந்து!
நினைவாற்றலை வளர்க்கும் நிகரற்ற மருந்து காய்ச்செடி நீ!
!2 மீ.வரை உயரம்வளரும் இனிய செடி நீ!
அமெரிக்காவில் நீ ‘ஓக்ரா’!
இலங்கை, இந்தியா என எங்கும் விளையும் கோடைப்பயிர் செடி நீ!
மூளை, நீரிழிவு நோய், புற்று நோய்,கல்லீரல் நோய், நோய் எதிர்ப்புச் சக்தி,குடல் புண், அஜீரணம், சிறுநீரகம், கொழுப்புக் குறைப்பு, உடல் எடை குறைப்பு, கண் பார்வை, இதய நலம், தோல் வறட்சி ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
கூட்டு, பொரியல், வறுவல், மோர்க்குழம்பு, சாம்பார்,கிரேவி,சூப், குழம்பு என எல்லா வகையிலும் பயன்படும் நல்ல காய் செடி நீ!
40 நாட்களில் பலன் தரும் நல்ல செடியே !
“வாயோ வெண்டைக்காய்; கையோ கருணைக்கிழங்கு” என்ற பழமொழிக்கு வித்தாய் அமைந்த சத்துக்காய்ச் செடியே!
உள்ளங்கை வடிவ இலைகளைக் கொண்ட உன்னத செடியே!
வெளிர் மஞ்சள் பூப்பூக்கும் குறுஞ்செடியே! வழவழப்பு தன்மை கொண்ட அழகு காய்ச் செடியே! நீர்ச்சத்து & நார்ச்சத்து நிறைந்த நல்ல காய் செடியே!
கணக்குப் பாடத்தில் சதமடிக்க உதவும் கற்பக செடியே!
ஹெக்டருக்கு 5.டன் வரை பலன் தரும் பணப்பயிரே!
பெண்களின் விரலே!
நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்
நெய்வேலி.
☎️9443405050