அறிவோம் தாவரங்களை – பாகல் கொடி

பாகல் கொடி.(Momordica charantia)

பாரதம் உன் தாயகம்!

கி.பி.14 ஆம் நூற்றாண்டில் சீனாவிற்குப் பயணம் செய்த சிறப்புக் கொடி நீ!

பூசனி,வெள்ளரி, தர்பூசணி கொடிகள் உன் உடன் பிறப்புக் கொடிகள்!

கசப்புச் சுவை கொண்ட மருந்துக்காய் கொடி நீ!

கொம்பு பாகற்காய்,மிதி பாகற்காய் என இருவகையில் விளங்கும் இனிய கொடி நீ!

5 மீ. வரை உயரம் வளரும் அழகுக்கொடி நீ!

கசப்புச் சுவை கொண்ட காய்க் கொடி நீ!

இரத்தக் கோளாறு,  வாந்தி, பேதி, தூக்கமின்மை, அரிப்பு, தோல்  தடிப்பு, விஷக்கடி, புற்றுநோய், மாலைக்கண் நோய், புண்கள், பருக்கள், உடல் எடை குறைப்பு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

ஊறுகாய், பொரியல், வறுவல், தொக்கு, குழம்பு, கூட்டு எனப் பல்வகையில் பயன்படும் நல்வகைக் கொடியே!

60 நாட்களில் பலன்தரும் அழகுக் கொடியே!

பட்டையான விதை கொடுக்கும் பச்சைக் கொடியே!

மஞ்சள் நிறப்பூப் பூக்கும் மகிமை கொடியே!

மாடித் தோட்டங்களிலும் வளர்க்கப்படும் மருந்து கொடியே!

வெப்பப் பிரதேசத்தில் விளையும் காய்க்கொடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க!உயர்க!

நன்றி பேரா.முனைவர் : ச.தியாகராஜன்

நெய்வேலி.

📞9443405050