காத்மான்ட்: உலகின் உயரமான மலைச் சிகரமான இமயமலையில் உள்ள  எவரெஸ்டின் உயரம் 8,448.86 மீட்டர் என நேபாளம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 1954ம் ஆண்டு அளவிடப்பட்டபோது,  எவரெஸ்ட் சிகரத்தின்  உயரம் 8,848 மீட்டர் என தெரிவிக்கப்பட்டது.

உலகின் மிக உயரமான மலைக்சிகரமான எவரெஸ்ட்  சிகரம் இந்தியாவின் வடக்கு அரணாக திகழும் இமயமலையில் அமைந்துள்ளது.   இதன் உயரம் முந்தைய கணக்கின் படி 8,848 மீட்டர்கள் ஆகும்.  ஆனால், கடந்த 2015 ஆம் வருடம் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய நில நடுக்கத்தின் பாதிப்பு எவரெஸ்ட் சிகரத்திலும் ஏற்பட்டிருக்கலாம் என்ற விவாதம் நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து,  கடந்த  2017 ஆம் ஆண்டு இமயமலையை அளவிடுவதற்காக புதிய குழுவை நேபாளம் அரசு நியமித்தது. ஆனால், பின்னர் சீனாவுடன் இணைந்து, கூட்டாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளவீடு செய்யப்போவதாக கடந்த 2019ம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் நேபாளம் சென்றதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து, சிகரத்தை அளவீடும் பணிகளுக்கு இருநாட்டு குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடைபெற்று வந்தன. அதன் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று இமயமலையில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு என்பதை அறிவித்து உள்ளன.

அதன்படி, இமயலையில் உள்ள  எவரெஸ்டின் உயரம் 8,448.86 மீட்டர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நேபாளம், சீனா இணைந்து நடத்திய ஆய்வுகளின் படி இந்த உயரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே 1954ம் ஆண்டு கணக்கீட்டின்படி 8,848 மீட்டர் இருந்த நிலையில், தற்போது மேலும் .86 மீட்டர் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.