
பிக்பாஸ் வீட்டில் தனது கருத்துக்களை வேண்டிய இடத்தில் சரியாக பதிவிட்டதால் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார் சம்யுக்தா.
சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேறினார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதன் முறையாக அவர் பேட்டியளித்துள்ளார்.
கடந்த வாரம் விஜய் டிவி பிரபல விஜே பாவனா சம்யுக்தாவிற்கு ஓட்டு கேட்டு ஒரு பதிவை தனது டிவிட்டர் தளத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில் லைவில் வந்த சம்யுக்தாவிடம் சிலர் பாவனா உங்களுக்கு எந்த உறவு முறை என்று கேட்டபொழுது, அவர் “பாவனா எனது பள்ளி சீனியர். இந்த கொரோனா ஊரடங்கின் போது கூட பாவனாவின் உறவினர்கள் சிலர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் என் வீட்டில்தான் தங்கி இருந்தனர். பாவனாவை எனக்கு நன்றாகவே தெரியும்” என்பதுபோல் கூறினார் .
[youtube-feed feed=1]