ராமேஸ்வரம்: வங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல், தென்மாவட்டங்களை  நெருங்குவதால் பாம்பன் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு மேலும் பல பகுதிகளிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரவி புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் இலங்கையின் 330 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில், இந்த புயல் வேகமாக நகர்ந்து வருகிறது. இந்தபியல் நாளை  இரவு திரிகோணாமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரெவி புயல் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ,சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புரெவி புயல் காரணமாக பாம்பனில் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை தொடங்கியுள்ளது. அத்துடன் புயல் நெருங்கி வருவதால் புரெவி புயல் நெருங்குவதால் பாம்பன் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பனுக்கு தென்கிழக்கே 530 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ள நிலையில் எச்சரிக்கையாக கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த புயல் கரையை கடக்கும் போது, 95கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.