டில்லி

ந்தியாவில் கடந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டு கால ஜிடிபி எதிர்பார்த்தை விட அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு காலாண்டும் ஜிடிபி குறைந்து வருகிறது.  இந்த கணக்கு வருடத்தின் முதல் காலாண்டான ஏப்ரல் – ஜூன் கால கட்டத்தில் ஜிடிபி 23.9% குறைந்தது.  இது கடந்த 40 ஆண்டுகளில் மிகவும் குறைவானதாகும்.  இதையொட்டி இரண்டாம் காலாண்டான ஜூலை – செப்டம்பர் கால கட்டத்தில் அது மேலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இரண்டாம் காலாண்டில் இந்தியாவில் ஜிடிபி அதிகரித்துள்ளது.   முந்தைய காலாண்டை விட இந்திய ஜிடிபி 4.4% அதிகரித்துள்ளது.   அதாவது ஜிடிபி 24.3/5 குறைவில் இருந்து 21% அதிகமாகி உள்ளது.  இதற்குக் காரணம் வைப்பு நிதி முதலீடு, விவசாய உற்பத்தி மற்றும் தொழில் உற்பத்தி அதிகரிப்பு எனக் கூறப்படுகிறது.

ஜிடிபி குறையும் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மோர்கன் ஸ்டான்லி கணக்கெடுப்பின்படி மிக  அதிக அளவில் அதிகரித்ததற்குக் காரணம் விவசாய உற்பத்தியின் 5.7% உயர்வு எனக் கூறப்பட்டுள்ளது.  கோடாக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்குவிட்டி கணக்கெடுப்பில் ஊரடங்கு விதிகள் தளர்வு இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.