
பிரபலங்கள் பலர் தங்களின் பெயரில் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் கணக்குகள் தொடங்குவது போல யூடியூப் சேனலும் தொடங்கி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் விஜயின் யூடியூப் சேனல் உருவாகப்போகிறது.
அதிகாரப்பூர்வமாக விஜய் மக்கள் இயக்கம் பெயரில் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்குகிறார் நடிகர் விஜய்.
விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த சேனல் தொடங்கப்படுவது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் நற்பணிகள் அனைத்தையும் அந்த சேனலில் வெளியிட்டு பரப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel