அறிவோம் தாவரங்களை – சக்கரவர்த்திக் கீரை செடி
சக்கரவர்த்திக் கீரைச்செடி. (Chenopodium album).
பாரதம் உன் தாயகம்!
வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்திருக்கும் தேன்செடி நீ!
கீரைகளின் அரசன் நீ!
பருப்புக்கீரை,கண்ணாடிக் கீரை, சக்கோலி, சில்லி எனப் பல்வகைப் பெயரில் பரிணமிக்கும் நல்வகைக் கீரைச் செடி நீ!
3 அடி வரை உயரம் வளரும் முதன்மைக் கீரைச் செடி நீ!
மூட்டுவலி, காயங்கள், வயிற்றுப் புண், இரத்தசோகை, சிறுநீரகக் கற்கள்,சிறுநீரகத்தொற்று, கர்ப்பப்பை நீர்க்கட்டி, மலச்சிக்கல்,தோல் சுருக்கம் & சிராய்ப்பு, நாக்குப்பூச்சி, குடல் ஒட்டுண்ணிகள்,குடல் கொக்கிப் புழு, மஞ்சள் காமாலை,வியர்க்குரு, நீர் எரிச்சல், தாய்ப்பால் அதிகரிப்பு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
இரும்புச்சத்து, நார்ச்சத்து கால்சியம்,பொட்டாசியம் நிறைந்த கற்பக செடியே!
தாது விருத்திக்கு ஏதுவான கீரைச்செடியே!
தாம்பத்திய உறவை மேம்படுத்தும் சுகபோக கீரைச்செடியே!
எலும்பை வலுவாக்கும் இனிய கீரைச் செடியே!
வாத்துக்கால் போன்ற இலை வடிவம் கொண்ட நேர்த்திச் செடியே!
இளஞ்சிவப்புப் பூப்பூக்கும் இனிய செடியே!
வெப்பத்தைக் குறைக்கும் மருத்துவச் செடியே!
தோட்டங்களில் வளர்க்கப்படும் நாட்டுக கீரைச் செடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
நெய்வேலி.