டெல்லி: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்த 4 வாரங்களுக்குள் டெல்லியில் அனைத்து வீடுகளுக்கும் மருந்து வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் சத்யேந்திர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா தொற்று 3வது முறையாக மீண்டும் பரவத் தொடங்கி இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந் நிலையில் இது குறித்து சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்ட 3 முதல் 4 வாரங்களில் அனைத்து வீடுகளுக்கும் சுகாதார பணியாளர்களின் உதவியுடன் கொரோனா மருந்து வழங்கப்படும்.
கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி, தயாரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி குஜராத், ஐதராபாத், புனேவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கொரோனா மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது கொண்டு வரப்படும் என்பது தெரியாது.இது குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறியவுள்ளார் என்றார்.