இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் சிலரில் ஒருவர். அவ்வப்போது, சில முக்கிய விஷயங்களை அவர் பகிர்ந்து கொள்வார்.

அண்மையில் தனது இன்ஸ்டாகிராமில், ரஹ்மான் வெளியிட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

என்ன புகைப்படம்.?

ஏ.ஆர். ரஹ்மான் மூத்த மகள் கதீஜா, சின்ன வயது குழந்தையாக இருக்கும் போது, அவரை ரஜினிகாந்த் தனது கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் தான், அது.

1999 ஆம் ஆண்டு வெளிவந்த ‘படையப்பா’’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். அந்த சமயத்தில் இந்த அபூர்வ புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

“தலைவருடன் என் ‘லிட்டில்’ இளவரசி கதீஜா. …1999. படையப்பா” என்ற குறிப்புடன் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார், இசைப்புயல்.

1997 ஆம் ஆண்டு ரஹ்மானுக்கும், சைராபானுவுக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கதீஜா தவிர, ரஹிமா என்ற மகளும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

– பா. பாரதி