பாலிவுட் நடிகர் சல்மான்கானின் ஓட்டுநருக்கும், இரண்டு ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சல்மான்கானும் அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க முடிவெடுத்துள்ளனர்.

தொற்று உறுதியான மூன்று பேரும் மும்பையில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் கூறப்படுகிறது.

இந்நிலையில் சல்மான்கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

[youtube-feed feed=1]