பாங்காக்: தாய்லாந்தில் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து, ருசி பார்த்த குட்டியானை ஒன்று, அந்த பகுதியில் திடீரென வெளிச்சம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அருகே உள்ள  மின்சார கம்பத்துக்கு பின்னால் ஒளிந்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவ்ளோ பெரிய உடம்பைக் கொண்ட குட்டியானை, சாதாரணமாக அரை அடி அகலமுள்ள மின்கம்பம் பின்னால் ஒளிந்துகொண்டு குசும்பு செய்தது நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தாய்லாந்தில் உள்ள சியாங் மாய் பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில், இரவு நேரத்தில் திடீர் சலசலப்பு சத்தம் கேட்டதால், அங்கு காவலுக்க நினற்  காவலர்கள் டார்ச் அடித்து பார்த்துள்ளனர். அப்போது கரும்பு காட்டுக்குள், கரும்பை ருசிபார்த்துக்கொண்டிருந்த குட்டியானை, வெளிச்சத்தைக் கண்டதும், அருகே இருந்த மின்கம்பம் ஒன்றின் பின் ஒளிந்து கொண்டு, சிலைபோல அசையாமல்  நின்றது.

இதைக்கண்ட காவலர்கள் ஆச்சரியத்துடன்  அதை புகைப்படம் எடுத்ததுடன், அதை சமூகவலைதளங்களிலும் பதிவேற்றி உள்ளனர்.  இந்த புகைப்படம் இது வைரலாக பரவி, அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டது.

தாய்லாந்து நாட்டில் 2000-த்துக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது.  யானைகள் முகாம்களும் உள்ளன. யானைகள் அந்த பகுதியில் உள்ள விளைச்சல் நிலத்தில் புகுந்து சேதப்படுத்தி வந்த சம்பவம் தொடர்கதையாக இருந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் இரவு முழுவதும் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு  யானைகள் முகாமில் யானை குட்டி ஒன்று ஊழியரிடம் குறும்பு தனம் செய்யும் காணொளி, வைரலானது.  குன்சுக்(Khunsuk) என்ற பெயரிடப்பட்ட ஒரு வயது யானைக்குட்டி, முகாமில் பூச்சுப்பணியில் ஈடுபட்டியிருந்த ஊழியரை தும்பிக்கையால் வருடி கவனத்தை பெற முயற்சிக்கிறது. ஊழியர்தன் பக்கம் திரும்பியதும் மகிழ்ச்சியடைந்த குட்டி யானை, மரத்திலான வேலி மீது முன்னங்கால்களைவைத்து ஏறி தனது தும்பிக்கையால்ஊழியரை தன் வசம் இழுத்துவிளையாடுகிறது. யானையின் விளையாட்டுத்தனம் கண்களுக்கு விருந்தளிப்பதாக இருந்தது.

அதுபோலவே தற்போது வெளிச்சத்தைக் கண்டதும் ஒளியும் யானை குட்டியின் புகைப்படம், அதன் அறிவுத்திறனையும், அதன் குசும்புத்தனத்தை மெச்சும் வகையில் உள்ளது.