அறிவோம் தாவரங்களை – தழுதாழை செடி

தழுதாழை செடி  (Clerodendrum phlomidis)

சிறு குன்றுகளின் சரளைப்பகுதி,குளக்கரைகள் வயல்களின் ஈரப் பாங்கான பகுதிகளில் தானே முளைத்திருக்கும் தங்கச் செடி நீ!

80 விதமான வாத நோய்களை நீக்கும் இனிய மருந்து செடி நீ!

தாண்டி, அக்னி மந்தாரை, வைஜயந்தி, தறுதலை, தக்காரி எனப் பல்வேறு பெயர்களில் விளங்கும் நல்வகைச் செடி நீ!

மாந்தம், மூக்கடைப்பு, கழலை, சொறி, சிரங்கு, கபம், உடல் கடுப்பு, குடைச்சல், காய்ச்சல், மேக நோய்கள், விரை வாதம், சுளுக்கு, மூட்டு வலி, அஜீரணம், நரம்புத் தளர்ச்சி, பொன்னுக்கு வீங்கி  முதலிய நோய்களுக்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

சித்த மருத்துவத்தில் பயன்படும் சிறப்புச் செடியே! நுணாக்காய் வடிவில் கொத்தாய் காய் காய்க்கும் முத்துச் செடியே!

வெளிர் பச்சை இலைகளைக் கொண்ட மிளிர் செடியே! வெள்ளை நிறப் பூப்பூக்கும் நல்ல செடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.