பாட்னா :

ண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி கட்சி தனித்து களம் இறங்கியது.

முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களை எதிர்த்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. இதனால் சுமார் 30 இடங்களில் ஐக்கிய ஜனதா தளம் தோற்றுபோனது.

இந்த நிலையில் பீகார் மாநில ஐக்கிய ஜனதா தளம் தலைவர் வஷிஷ்த் நாராயண சிங் அளித்துள்ள பேட்டியில் “சிராக் பஸ்வான் கட்சியால் எங்கள் கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் தோல்வி அடைந்தனர் என்றாலும், நிதீஷ்குமாரின் சாதனைகளால் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளோம” என்று தெரிவித்தார்.

“தன்னை பற்றி பெரிதாக நினைத்துக்கொண்டிருந்த சிராக் பஸ்வானுக்கு இந்த தேர்தலில் வாக்காளர்கள் சரியான பதில் அளித்துனர்” என்று குறிப்பிட்ட நாரயண சிங் ‘சிராக் பஸ்வான், இரண்டாம் தர நடிகர்’ என ஆவேசமாக தெரிவித்தார்.

“ஒரு புறம் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தீங்கு விளைவித்துக்கொண்டு, மறுபுறம் பா.ஜ.க.வை புகழ்ந்து பேசுகிறார், , சிராக். இது போன்றவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்க வேண்டுமா? என்பதை பா.ஜ.க. தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

– பா. பாரதி