சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் நடைககளை நடத்தி விரும் பிரபல நகைக்கடைகளில் வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத  ரூ.500 கோடி மதிப்பிலான நகைகள் இருப்பு வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை பூக்கடை பகுதியான சவுகார்பேட்டை என்எஸ்சி போஸ் சாலையில் பிரபலமான நகைக் கடை உள்ளது.  இந்த கடைகளின் கிளைகள் தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை மட்டுமின்றி மும்பை உள்பட சில வெளி மாநிலங்களில் உள்ளது.  இந்தக் கடையில் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்படுவதாகவும், தரமற்ற தங்க நகைகள் விற்கப்படுவதாகவும் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த நிறுவனத்தின் கடைகள், மற்றும் உரிமையாளர்களின் வீடுகள் உள்பட 32 இடங்களில்  கடந்த 10-ம் தேதி ஒரே நேரத்தில்  வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர். இந்த சோதனையின்போது வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து கூறிய அதிகாரிகள்,  சென்னை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி, மதுரை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 32 இடங்களில் நடைபெற்ற  சோதனையில், கணக்கில் வராத 400 கோடி மதிப்பிலான 814 கிலோ நகை இருப்பில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அது வரி அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அந்த இந்த நிறுவனம்,  வருமானத்தை குறைத்துக் காட்டும் வகையில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக இந்தநிறுவனம் கணக்கில் வராத ரூ.500 கோடி அளவுக்கு வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து இது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.