சென்னை: தமிழகஅரசு கொண்டு வந்துள்ள 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் 395 அரசு பள்ளி மாணாக்கர்கள் இந்தஆண்டு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளறதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

மருத்துவப்படிப்புக்கு நீட் நுழைவுத்தேர்வை மத்தியஅரசு கட்டாயமாக்கி உள்ள நிலையில், தமிழக மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேரும் வகையில் தமிழகஅரசு, நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பளளி மாணாக்கர்கள் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கிடு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக தமிழக மாணாக்கர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று கூறியவர்,.  இந்தாண்டு 4,061 மருத்துவ இடங்களுக்கு நவம்பர் 18-ந்தேதி அல்லது நவ.19-ந்தேதி முதல் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

தினசரி 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட  இருப்பதாக கூறியவர், திட்டமிட்டபடி நவம்பர் 16ந்தேதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட இருப்பதாகவும், நடப்பாண்டில் தமிழகஅரசு கொண்டு வந்துள்ள 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம், அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணாக்கர்கள்  304 பேர் எம்.பி.பிஎஸ் படிப்பில சேரவும், 91 பேர் பி.டி.எஸ் படிப்பில் சேரவும் வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.