அறிவோம் தாவரங்களை – பாதாம் மரம்
பாதாம் மரம் (Prunus dulcis)
வடகிழக்கு அமெரிக்கா, பெர்சியஸ் உன் தாயகம்!
வாவலாங் கொட்டைமரம், வாதுமை மரம் என இரு வகைப் பெயர்களில் விளங்கும் இனிய மரம் நீ!
வெப்பமண்டலக் காடுகளில் அதிகம் வளரும் பெரிய மரம் நீ!
சீனா, துருக்கி, ஈரான் நாடுகளில் அதிகமாய் வளரும் அழகு மரம் நீ!
கொழுப்புக் குறைப்பு, அஜீரணம், நீரிழிவு, எலும்பு வளர்ச்சி, இதய நலம், மனக்களைப்பு, சுவாசக் கோளாறு, சிறுநீர்ப் பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை, ரத்தச் சமன்பாடு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
ஆயுர்வேதம், யுனானி மருத்துவத்தில் பயன்படும் மருத்துவ மரம் நீ!
துணி சாயம், தலைச் சாயம், காபி, கேக், ரொட்டி, எண்ணெய், ஊறுகாய், மதுபானம் தயாரிக்கப் பயன்படும் நயன்மிகு மரம் நீ!
வட்ட வடிவ ஒற்றை விதை உடைய கொட்டை மரமே!
உணவாய்ப் பயன்படும் உன்னத மரமே!
ஓவியம் வரையத் தோல் தரும் மரமே!
சீன நாட்டு மக்கள் உள்ளங்கையில் வைத்து விளையாடும் பாரம்பரிய விளையாட்டிற்குப் பழக்கொட்டைத் தரும் மரமே!
முந்திரிப் பருப்பின் சுவை கொண்டு விளங்கும் இனிய பருப்பு மரமே!புரதச்சத்து மிகுந்த பருப்பு மரமே!
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அற்புத மரமே!
இனிய பாதாம் பால் தரும் பசுமை மரமே!
புயலுக்கும் அஞ்சாத புனித மரமே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050.