மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரிக்கும் படம் பிஸ்கோத். இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார்.
ரதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.
ஆனந்தராஜ், ஜீவா, மொட்டை ராஜேந்திரன், மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஆடியோ உரிமையை சமீபத்தில் திங்க் மியூசிக் நிறுவனம் கைபற்றியது. இந்த படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
இந்நிலையில் படத்தின் சின்ன பிள்ளை போலே பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. பூர்ணிமா மற்றும் முஜிப் ரஹ்மான் பாடிய இந்த பாடல் வரிகளை எழுதி இசையமைத்துள்ளார் ரதன். பாடலின் லிரிக் வீடியோவில் சந்தானம் RCB கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியுடன் இருப்பதால், இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.