2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்திருந்த படம் காஞ்சனா. தற்போது லக்ஷ்மி பாம் என்கிற பெயரில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்க, லாரன்ஸ் இயக்கத்தில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடியால் தற்போது இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியீடாக நவம்பர் 9-ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. லக்ஷ்மி பாம் திரைப்படம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, UAE போன்ற நாடுகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இதில் அக்ஷய் குமார் முதல் முறையாக திருநங்கையாக நடித்துள்ளார். நவம்பர் 9-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் சேனலில் வெளியாகிறது. லக்ஷ்மி பாம் திரைப்படம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, UAE போன்ற நாடுகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. கர்னி சேனா என்ற அமைப்பு இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது. அதில் லட்சுமி தேவியை களங்கப்படுத்துவதுபோல இதன் டைட்டில் இருப்பதாகவும் உடனடியாக டைட்டிலை மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தது. இதே போல, நடிகர் முகேஷ் கண்ணா உள்பட சிலரும் இந்த டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இது பரபரப்பாகப் பேசப்பட்டது.டைட்டிலில் இருந்த பாமை நீக்கிவிட்டு லக்ஷ்மி என்று டைட்டிலை வைத்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் அக்ஷய் குமார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
Finishing touches being added by the man himself, my director @offl_Lawrence who’s been my constant guide throughout this journey of #Laxmii 🙏🏻 Now it’s over to you guys, #LaxmiiStreamingToday from 7.05 pm only on @DisneyplusHSVIP pic.twitter.com/zszpDSM9qe
— Akshay Kumar (@akshaykumar) November 9, 2020