லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் படத்திற்கு விக்ரம் என்று தலைப்பு வைத்து டீஸரை கமலின் பிறந்தநாள் அன்று வெளியிட்டார்கள்.
இந்நிலையில் விக்ரம் டீஸர் காப்பியடிக்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் தொடரான நார்கோஸ்: மெக்சிகோ சீசன் 2ன் ட்ரெய்லரை அப்படியே காப்பியடித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்று சமூக வலைதளவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.