ஷார்ஜா: ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப்போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலர் யார் என்பதில், மும்பை அணியின் பும்ராவுக்கும், டெல்லி அணியின் ரபாடாவுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த இரு அணிகளுமே இறுதிப்போட்டியில் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போயை நிலையில், மொத்தம் 16 போட்டிகளில் ஆடியுள்ள டெல்லியின் ரபாடா, மொத்தம் 29 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். மும்பையின் பும்ரா 14 போட்டிகளில் ஆடி, மொத்தமாக 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ரபாடாவின் எகானமி ரேட் 8.23 என்பதாகவும், பும்ராவின் எகானமி ரேட் 6.71 என்பதாகவும் உள்ளது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில், ரபாடாவை, பும்ரா முந்துவாரா? அல்லது மேலும் சில விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் தொப்பியை ரபாடா தட்டிச் செல்வாரா? என்பதை பார்ப்பதற்கு இன்னும் ஒருநாள் காத்திருக்க வேண்டும்.