வாஷிங்டன்: தனது உடன்பிறந்த சகோதரி அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மாயா ஹாரிஸ்.
தமிழ்நாட்டு தாய்க்கும் ஆப்பிரிக்க தந்தைக்கும் பிறந்தவர்கள் கமலா ஹாரிஸ் மற்றும் மாயா ஹாரிஸ்.
தற்போது, கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து, “ஓ கடவுளே! அது நடந்தேவிட்டது… நமது அமெரிக்காவின் அடுத்த துணை குடியரசுத் தலைவர்… நமது முதல் பெண்(மேடம்) துணைக் குடியரசுத் தலைவர்… எனது சகோதரி!” என்று டிவிட்டரில் பதிந்துள்ளார் மாயா.