நடிகர் கமலஹாசனிடம் மக்கள் தொடர்பாளராக (பி.ஆர்.ஓ) பணியாற்றியவர் நிகில் முருகன்.
கே.பாலச்சந்தரின் கவிதாலயா உள்ளிட்ட பட நிறுவனங்களிலும் பி.ஆர்.ஓ.வாக இருந்துள்ளார்.
இவர் முதன் முறையாக சினிமாவில் நடிக்கிறார்.
வித்யா பிரதீப் கதாநாயகனாக நடிக்கும் திரில்லர் படமான “பவுடர்” என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நிகில் முருகன் கேரக்டர் பெயர் – ராகவன்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “வேட்டையாடு விளையாடு” என்ற படத்தில் கமலஹாசனின் கேரக்டர் பெயர் – ராகவன். இந்த படத்தை விஜய் ஸ்ரீ ஜி, டைரக்ட் செய்கிறார்.
“ஷுட்டிங் ஆரம்பிக்கும் போது, லேசாக தொப்பை இருந்ததால் அதனை குறைக்குமாறு நிகில் முருகனிடம் தெரிவித்தேன். அவரும் ஊரடங்கு நேரத்தில் ’ஜிம்’முக்கு சென்று பயிற்சி எடுத்து கச்சிதமான தோற்றத்துடன் வந்து விட்டார். நிகில் முருகனுடன் கதாநாயகன் வித்யா பிரதீப் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்கப்பட வேண்டும்” என்கிறார், இயக்குநர் விஜய்.
– பா. பாரதி