மும்பை :
ஷாரூக்கான் – கஜோல் ஜோடியாக நடித்த காதல் படமான “தில்வாலே துல்ஹானியா லா ஜாயெங்கே” என்ற இந்தி திரைப்படம் 25 ஆண்டுகளுக்கு முன்பு – 1995 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது.
மும்பையில் உள்ள மராத்தா மந்திர் தியேட்டரில் இந்தப்படம் தொடர்ச்சியாக 24 ஆண்டுகள் ஓடி சாதனை படைத்தது.
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தியேட்டர்கள் அடைக்கப்பட்டதால், இந்த படம் நிறுத்தப்பட்டது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மீண்டும் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால், சுமார் 8 மாதங்கள் நிறுத்தப்பட்ட “தில்வாலே” திரைப்படம் மராத்தி மந்திர் தியேட்டரில் தீபாவளியை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி மீண்டும் திரையிடப்பட இருப்பதாக தியேட்டரின் உரிமையாளர் மனோஜ் தேசாய் தெரிவித்தார்.
தினசரி மாட்னி காட்சியாக இந்த படம் திரையிடப்படுகிறது.
குறைந்த பட்ச டிக்கெட் கட்டனம் 20 ரூபாய்.அதிக பட்ச கட்டணம் 25 ரூபாய்.
இந்த படம் வெளிவந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்து வெள்ளிவிழா காணும் இந்த நேரத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து , ஜெர்மன், கனடா உள்ளிட்ட பல நாடுகளில், மீண்டும் , இதனை ரிலீஸ் செய்ய பட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார்.
– பா. பாரதி