அங்காரா: துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

துருக்கியில் கடந்த 30ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கி, கிரீஸ் நாடுகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. முக்கியமாக துருக்கியில் பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கி இதுவரை 1,035 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக கூடாரங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel