அறிவோம் தாவரங்களை – கானா வாழை

கானா வாழை. (COMMELINA BENGALENSIS)

ஆசியா, ஆப்பிரிக்கா உன் தாயகம்! ஈரநிலங்கள், கடற்கரையோரங்களில் முளைத்துக் கிடக்கும் களைச்செடி நீ!

கானான் வாழை, கானாங்கோழிக் கீரை,காணாம் வாழை என மூவகைப் பெயரில் விளங்கும் முத்துச்செடி நீ!

தைவான், இந்தியா, ஜமைக்கா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அதிகம் வாழும் அற்புதச் செடி நீ!

பெண்களின் மார்பகக் கட்டிகள், வலி, வீக்கம் ,கால் வீக்கம், வாத நோய் எரிச்சல், சளி,தொண்டைக் கம்மல், குரல் வளைத் தொல்லைகள், பால்வினை நோய்கள், பருக்கள், வெள்ளை போக்கு, பெரும்பாடு, குட்டம், தோல் நோய்கள் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

உப்புசத்தை வெளியேற்றும் துப்புரவாளனே!

தாம்பத்திய வாழ்வை வளப்படுத்தும் வயகரா செடியே!

கன்றுக் குட்டிகள் அதிகம் உண்ணும் உணவு செடியே!

பயிர்களின் இடையே வளரும் களைச் செடியே!

முட்டை வடிவ இலைகள் கொண்ட முதன்மைச் செடியே!

நீல நிறப் பூப்பூக்கும் ஞானச்செடியே!

உடலுக்கு வலிமை கூட்டும் உன்னதச் செடியே!

ஆண்மையை அதிகரிக்கும் அற்புதச் செடியே!

நீவிர் வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.